புதிய அரசாங்கத்தினால் புத்தாண்டை முன்னிட்டு
நாடளாவிய ரீதியில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுப்பு.
கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டத்னை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஐஸ்டினா முரளிதரன் தலைமையில் நிகழ்வு புதன்கிழமை(01.01.2025) இடம்பெற்றது.
இதன் முதன் நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டுஈ தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் பிரதான நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பின்னர் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திதை தேசிய ரீதியாக ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைப்பதை நிகழ்நிலை ஊடாக உத்தியோகத்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் கிளீன் ஸ்ரீலங்கா சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி
சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் காணி திருமதி எஸ்.நபரூப ரஞ்சனி
மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment