1 Jan 2025

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனைகள்.

SHARE

சீயோன்  தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனைகள்.

புதுவருட பிறப்பை முன்னிட்டு சீறற்ற  கால நிலைக்கு மத்தியிலும்  மட்டக்களப்பு  சீயோன்  தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் புது வருடத்தை முன்னிட்டு  இன மத வேறுபாடு இன்றி  ஆலயங்களில் ஆராதனைகள்  இடம்பெற்றன. 

கிறிஸ்தவ மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் புதுவருட பிறப்பு பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  புதுவருட பிறப்பு தினத்தை முன்னிட்டு. நாடெங்கும் தேவாலயங்களில் ஆராதனைகள்  இடம் பெற்று வருகின்றன. இம்முறை  புதுவருட பிறப்பு ஆராதனைகள்  வெகு விமர்சையாக.  கொண்டாடப்பட்டன. 

இதேவேளை மட்டக்களப்பு  பிள்ளளையாரடி சீயோன்  தேவாலயத்திலும் புதுவருட பிறப்பு நள்ளிரவு  ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில்  இடம்பெற்றது.  புதுவருட பிறப்பு  பற்றிய பாடல்கள் பாடி இங்கு ஆராதனைகள்  நடைபெற்றன. 

புதுவருட பிறப்பை  குறிக்கும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, கிறிஸ்தவ மாணவர்களுக்கு புதுவருட பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும், பிரதான போதகரால் வழங்கப்பட்டன. இந்த  புதுவருட பிறப்பு தநள்ளிரவு  ஆராதனையில் பெருமளவிலான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 






SHARE

Author: verified_user

0 Comments: