5 Jan 2025

நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.

SHARE

நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் சனிக்கிழமை (04.01.2025)  நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் எனும் ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

வீட்டிற்கு அருவிலிருந்த நீர் நிலையிலேயே குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீழ்ந்துள்ளது. 

நீர் நிலையில் விழுந்த குழந்தையை மீட்டு பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போதும் குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. 

பிரேத பரிசோதனைகளுக்காக குழந்தையின் உடலம் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டள்ளது. 

பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

 



SHARE

Author: verified_user

0 Comments: