காட்டுயானைகள் கிராமத்துக்குள் ஊடுருவாமலிருக்க பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு வவுணதீவு பிரதேச மக்கள் கோரிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டு யானைகளின் தாக்குதலால் மக்கள் தமக்கு வேண்டிய பாதுகாப்பு கருத்தி யானைப் பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
காட்டுயானைகளின் தொல்லைகளால்
கடந்த 10 அண்டுகளாக மிகவும் பாரதூரமான இழப்புக்களை, வவுணதீவு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில்
செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாயத்தையும் யானைகள் துவசம் செய்து வருகின்றன.
இன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை
புல்லுமலை, கித்தூள், உன்னிச்சை, போன்ற விவசாயக் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து
அங்குள்ள மக்களின் வாழ்வாதாரச் செய்கையாகவுள்ள
தென்னை, வாழை, நெல், சேளன், போன்ற பல
பயிரினங்களை ஆழித்துள்ளன.
எனவே கிராமங்களுககுள் யானைகள் நுளையாமல் இருக்க யானை பாதுகாப்பு மின்சார வேலிகளை அமைத்து தருமாறு அப்பகுதிமக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் முன்வைக்கின்றனர்.
பொருந்தொகை செலவுசெய்து விவசாயத்தை மேற்கொண்டால் அறுவடையாகும் போது ஒரேநாளில் காட்டுயானைக்கூட்டம் வந்து அழித்து, துவசம் செய்துவிட்டு போகின்றன. பயிர்கள், உடமைகள் அழிக்கப்படும் போது தமக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு இனமை காரணமாக உரிய பாதுகாப்பு வேலிகளை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment