27 Jan 2025

உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் கிராம் பிரதேச மக்கள்.

SHARE

உயிரை பணயம் வைத்து  பயணம் செய்யும் கிராம் பிரதேச மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் அடைமழை மற்றும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரண்டு வாரங்களாக அவர்களதுளது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்காக உயிரை பணயம் வைத்து  நகருக்கு வரவேண்டியுள்ளதாகவும் அங்கலாய்க்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை பெய்து வந்தது. இதனால் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டு வாரங்களாக தங்களது  பாதிக்கப்பட்டுள்ளதுடன் அசர தேவைகளுக்காக உயிரை பணயம் வைத்தே திங்கட்கிழமை(27.01.2025) வரைக்கும்   கிரான் நகருக்கு வந்து செல்கின்றனர். 

கடந்த இரண்டு நாட்களுக்குமுன் இரண்டு விவசாயிகள் நகர்புறத்திற்கு வந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் போது காட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அரசாங்கத்தினால் படகுபாதை சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஆபத்தான வீதிகளில் பயணம் செய்து மிகவும் சிரமப்படுவதை தற்போதும் காணக் கூடியதாக உள்ளது. 

அப்பகுதியில் இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள்; மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது. இரவு வேலைகளில் தங்களுக்கு மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்த எந்தவித போக்குவரத்துகளும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மிகவும் ஆபத்தான வாழ்க்கையை அவர்கள் தற்போதும் வாழ்ந்து  வருவதாகவும் அப்பகுதிம்ககள் அங்கலாய்க்கின்றனர்,





















 

SHARE

Author: verified_user

0 Comments: