விரதங்களில் சிறந்த
விரதமாகக் கருதப்படும் சொர்க்க வாயில் வைகுண்ட ஏகாதசி விரத பூஜை மட்டக்களப்பு வந்தாறுமூலை
ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை(10.01.2025) இரவு நடைபெற்றது.
கிழக்கில் மிகவும் பிரசித்தி வாய்ந்த திருப்பதியாக திகழும் வந்தாறுமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் நான்கு சாம பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான பக்தர்கள் பல பாகங்களிலும் இருந்து வந்து விரதத்தை அனுஷ்த்திருந்தனர்.
கண்ணன் பஜனை குழுவினரால் அன்றைய தினம் ஆலயத்தில் கண் விழித்திருக்கும் பக்தர்களைக் கவரும் வகையில் ஆலய மண்டபத்தில் கலை நிகழ்வுகளும், சமய சொற்பொழிவுகளும், பக்தி பாமாலை என்னும் இசை நிகழ்வுகளும், பஜனை நிகழ்வுகளும், இடம் பெற்றன.
பூஜை நிகழ்வுகள் யாவும்
நவக்கிரக பூஜா விஷ்ணு பூஜா சாச்சிநாத தேவேந்திர குருக்கள் அவர்கள் தனிமையில் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment