பேசுகின்ற ஒரு சக்தியாக இருந்து தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் - வேட்பாளர் சிறிநேசன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சினிய் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை(31.04.2024) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபின்போதே அவர இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
புதுக்கடைகள் ஆரம்பித்து விட்டால் அந்த கடைகளுக்குள் சென்று கொள்வனவு செய்து பார்ப்பதும், அது ஒரு உணவகமாக இருந்தால் அங்குள்ள உணவுகளை உண்டு பார்ப்பதும் வாடிக்கையாக இருக்கின்றன. இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற அந்த கடைக்குள் தமிழர்கள் சென்று அதனை பார்ப்பதற்கு அல்லது அதை சுவைப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் அதற்கு முன்பாக நான் சொல்லக்கூடிய ஆலோசனை என்னவெனில், நடைபெறப் போகின்ற தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாமல் தமிழ் தேசிய பிறப்பில் சோடை போகாமல், சோரம் போகாமல், பயணிக்க கூடிய தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமாக அதனை ஒரு பலமான சக்தியாக மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த பேரினவாத கட்சிகள் எங்களை ஏமாற்றாமல் நாங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வழி கூற வேண்டும், என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறி வைக்கின்றேன். நாங்கள் கடந்த காலத்தில் சமாதான தேவதையாக வந்த சந்திரிகா பற்றி தப்பான கணக்கு போட்ட பின்னர் ஆறு மாதத்தில் அவருடைய சுய ரூபத்தை, விகார முகத்தை, நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது. அதேபோன்றுதான் இப்போது சொல்லுகின்றேன் இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற விடயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களது நடத்தைகளை போக்குகளை அவதானிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
இந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக வாக்குகளை அளித்து ஏமாந்து போகாமல் தமிழ் தேசியத்தை தமிழர் உரிமையை தமிழரின் ஒரு இழப்பிரச்சினை தீர்க்கக்கூடிய விதத்தில் செயல்பட்டு வருகின்ற தமிழரசு கட்சிக்கு சாதகமாக வாக்களிப்பதன் மூலமாக கீரை கடைக்கும் எதிர்க்கடை இருக்க வேண்டும் என்று சொல்வது போன்று இந்த தென்னிலங்கை பாரிய சக்தியாக விளங்குகின்ற இந்த ஆளுங்கட்சிகளுக்கு நாங்கள் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக இருந்து தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
சர்வதேசத்தின் பொருளாக நாங்கள் இருக்க வேண்டும் ஒழிய அந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது என்பதை வெளிப்படையாக கூறி வைக்க விரும்புகின்றோம். எமது கட்சியிலிருந்து எவராவது அமைச்சர் பதவி எடுக்க வேண்டும் அதன் மூலமாக ஒரு கௌரவத்தை பெறவேண்டும் அதிகாரத்தை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்க முடியாது. என்றுதான் நான் கருதுகின்றேன். அதைவிட எங்களுடைய யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராக சுமந்திரன் அவர்கள் ஒரு கருத்தையை வெளியில் விட்டிருக்கின்றார். அதாவது சிறிதரன், மற்றும் சிறிநேசன் ஆகியோர வேட்பாளர்களாக களம் இறக்கப்பட வேண்டும் என்கின்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை அவர்கள் களமிறக்கப்பட்டு இருப்பதை தான் விரும்பவில்லை என்ற பாணியில் கூறியிருக்கின்றார். ஒரு முடிவு எடுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கூறுவது ஒரு பொருத்தமற்ற செயல் என்று நான் கூறுகின்றேன். மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் களத்தில் இறக்கப்பட வேண்டுமே தவிர சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர்கள் களத்தில் இறக்கப்பட வேண்டும் என்று கனவு காண்பது ஒரு விபரீதமான சிந்தனை அல்லது வெறுப்பு சிந்தனை அல்லது பழி வாங்குகின்ற சிந்தனையாக இருக்க முடியும். எனவே தயவு செய்து சுமந்திரன் அவர்கள் தேர்தல் காலத்தில் இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது மக்களின் பார்வை எப்படி இருக்க போகின்றது ஒரு குறித்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பற்றி நாங்கள் எந்த பேச்சும் பேசவில்லை. அப்படி இருக்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற என்னைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு அல்லது விபரீதமான ஒரு கருத்தினை வெளியிடுவதற்கு அவருக்கு அப்படியான உரிமை இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இயன்ற வரைக்கும் நாங்கள் ஒரு கட்டுக்கோப்பாக இருந்த தேர்தலை முகம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செயல்படுகின்ற போது சுமந்திரன் அவர்கள் விபரீதமான கருத்துக்களை விமர்சன ரீதியான கருத்துக்களை இவ்வாறு கூறிக் கொண்டிருப்பது ஒரு மாவட்டத்தில் தீர்மானத்தை அல்லது ஒரு மாவட்டத்தின் தேர்தல் போக்குகளை தேர்தல் கணிப்புகளை மக்கள் தீர்ப்புகளை மாற்றி விடுகின்ற ஒரு செயல்பாடு போன்று நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. தேவையற்ற கருத்து உழறினால் நாங்களும் அதற்குரிய பதில்களை அளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்படுகின்றோம். குறிப்பாக எங்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கின்றார்கள் எனவே மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு வேட்பாளரை குறித்த மாவட்டம் விரும்பப்படுகின்ற மட்டக்களப்பு மக்களை குழப்புகின்ற செயற்பாடுகளில் எவரும் செயல்படக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
புதிய ஆட்சியில் இணைந்து அமைச்சரவையை பெற்றுக்கொண்டு நடாத்துகின்ற ஒரு இணக்க அரசியல் என்று ஒன்று காணப்படுகின்றது. அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் நல்ல செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதனை ஆதரித்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி இருக்க முடியும். கடந்த காலத்தில் நல்லாட்சி காலத்தில் மூலமாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளாமல் நாங்கள் ஒரு இணக்கு அரசியலை செய்திருந்தோம். அதன் மூலமாக சில பல அபிவிருத்திகளைகூட செய்யக்கூடியதாக இருந்தது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஒரு அரசியல் தீர்வுக்காக மேற்கொண்டோம்.
அதனை விடுத்து எந்தவிதமான உத்தரவாதமும் தராத ஒரு ஆதிக்கம் உள்ள தென்னிலங்கை சக்தியோடு கூடிக் குலாவி அமைச்சர் பதவிகளை எடுப்பது என்பது அது தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கின்ற விடயமாக அமையும். அது சில சுயநலன்களை வெளிப்படுத்துகின்ற ஒரு விடயமாகத்தான் அமைய முடியும். எனவே இந்த விடயத்தை அவர்கள் வெளிப்படையாக கூற வேண்டும் அமைச்சரவையில் பங்குதாரிகளாக இருப்பதா அல்லது நல்ல செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக என்கின்ற விடயத்தை இpணக்கு அரசியல் பற்றி கூறுகின்றவர்கள் மிகவும் விளக்கமாக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது.
எதிர்தரப்புகள் தமது தந்திரோபாய முயற்சிகள் மூலமாக அல்லது நுட்பமான பிரச்சாரம் மூலமாக தங்களது வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்வதற்காக பிழையான தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார். குறித்த சிலர் நான் தமிழரசி கட்சியில் போட்டியிடவில்லை என்றுகூட பொய் சொல்லி வருகின்றார்கள். ஆகவே என்னை பொறுத்தமட்டில் தங்களுடைய பெட்டிக்காக பல பொய்களை பல புரட்டுக்களை பல வதந்திகளை பரப்புகின்ற போக்கை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஆனால் தமிழரசு கட்சி நலிவடைந்துள்ளதா என்பது மக்கள் தீர்ப்பின் பின்னர் தான் புரிந்து கொள்ளலாம். மட்டக்களப்பில் தமிழரசு கட்சி ஒரு பலமான சக்தியாக இருக்கின்றது. அது மூன்று ஆசனங்களைப் பெறக்கூடிய ஒரு நிலையில் ஒரு பலமான சக்தியாக இருக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம் அதனோடு எதிர்தரப்பு அரசியல் செய்கின்றவர்கள் வதந்திகளை பரப்புகின்றவர்கள் கட்டுக்கதைகளை கட்டி விடுகின்றவர்கள் பலவீனமடைந்திருக்கின்றார்கள் கடந்த காலத்தில் எங்களது மாற்று சக்தியாக ஆளும் அரசாங்கத்தில் ஒட்டி உறவாடி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த ஒரு கட்சிக்கு கடந்த காலத்தில் இருந்த சூழ்நிலை இந்த காலத்தில் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் 67,000 வாக்குகளை பெற்றோம் 56,000 திருப்புவாக்குகளை பெற்றோம் என்றெல்லாம் மார்க்கெட்டிக் கொண்டிருக்கின்ற சிலர் இந்த தேர்தலில் அவர்களுக்கு ஏற்படுகின்ற வாக்கு சரிவு என்பது தற்போது விளங்கிக் கொண்டிக்கலாம். என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் மூன்று ஆசனங்களோடு இருந்த ஒரு தென்னிலங்கை அரசியல் கட்சி கிட்டதட்ட நான்கு வீதத்துக்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சி கிட்டதட்ட 56 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் அந்த கட்சி 42 விதமான வாக்குகளை பெற்றிருக்கின்றது என்பதையும் நான் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். எனவே கால சூழ்நிலைகள் மாறுகின்ற போது அவர்களுடைய போக்குகள் நோக்குகள் செயற்பாடுகள் மாறுகின்ற போது மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் 56,000 விருப்பு வாக்குகளை பெற்றோம் என்று அரசியல் முதிற்சியறவர்கள் இந்த தேர்தலில் அவர்களுக்கு விழ வேண்டிய அடிகளை அவர்கள் பெற்றுத்தான் ஆகவேண்டும். ஊழல் மோசடி, லஞ்சம், கையூட்டு திருட்டு, போன்றவற்றின் மூலமாக சுயநல அரசியல் அனுபவித்தவர்களுக்கு மக்கள் தீர்ப்பளிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். மது போத்தல்களாலோ அல்லது பண நோட்டுக்களாலோ, அல்லது இன்னும் பல சலுகைகள் மூலமாகவோ இந்த முறை அவர்களுடைய வாக்கு வங்கிகளை அதிகரிக்க முடியாது. அவர்களுடைய வாக்கு வங்கி வற்றி விட்டது என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்.
தமிழரசு கட்சியில் சில குறைகள் இருக்கின்றன, சில ஆதிக்கங்கள் இருக்கின்றன. ஜனநாயகத் தன்மையை அகற்றுகின்ற விடயங்கள் இருக்கின்றன. என்றெல்லாம் கூறுகின்றார்கள் இதில் ஆழமான அர்த்தங்கள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி என்றால் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது, மக்கள் மன்றம் அதாவது மக்கள் தீர்ப்பு அல்லது மக்களின் வாக்களிப்பு மக்களின் தீர்மானம் என்பது தேர்தல் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. அந்த வேளையில் அவர்கள் என் மீது குறைபாடுகள் இருந்தால் நான் தமிழர்களின் ஒற்றுமைக்கு தடையாக இருந்தால் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருந்தால் அதனை மக்கள் பார்பார்கள்.
இதேபோன்றுதான் யார் யார் தமிழகத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கின்றார்கள், தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கின்றார்கள், அல்லது சுய சிந்தனையற்றவர்களாக தலையாட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள், என்ற கருத்தினை கூறுவது ஒரு அறிவுபூர்வமான பகுத்தறிவாத சிந்தனைக்கு முரண்பாடான ஒரு செயல்பாடாகதான் இருக்கும். இத்தேர்தலிலே 8 பேர் போட்டியிடுகின்றோம் அதில் தீர்க்கமாக சிந்தித்து பொருத்தமானவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கடந்த காலத்தில் யார் தவறவிட்டார்கள் அல்லது ஒற்றுமைக்கு தீங்கிழைத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் அதற்காக ஒட்டுமொத்தமாக தமிழரசு கட்சியைக் குறை கூறுவது பிழையாக செயல்பட ஆகும் என அவர் இதன்போது தெரிவித்தர்.
0 Comments:
Post a Comment