27 Nov 2024

கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு மேலும் இரு தினங்களுக்கு விடுமுறை நீடிப்பு - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்.

SHARE

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளும் கடந்த (26,27/11/2024) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்குவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர அவர்கள் வழங்கியிருந்தார். இருப்பினும் சீரற்ற காலநிலை தொடர்வதனால் மேலும் இரண்டு தினங்களுக்கு  (28,29/11/2024) குறித்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 3ம் தவணை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லீம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக் கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ்விடுமுறை மேலும் இரண்டு தினங்களுக்கு நீடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: