27 Nov 2024

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு.

மாவீரர் நினைவு நாள் இன்றயதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டதின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட  பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட்  தங்கநிலா என்பவரின் தாயார்

கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார் தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட  பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்து தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர்.


























SHARE

Author: verified_user

0 Comments: