28 Nov 2024

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2024

SHARE

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2024

கடந்த 24.11.2024 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

80 Diploma மாணவர்களும், 80 HND மாணவர்களும் 100 Bachelors மாணவர்களும் ,20 Masters மாணவர்களும் விருதுகளை பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி னுடைய பதில் துணைவேந்தர் மதிப்பிற்குரிய Dr . U. L. அப்துல் மஜீத்  அவர்களும்,  சிறப்பு அதிதியாக மாலைத்தீவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் Mr. ஹுசைன் ஷரீப் அவர்களும், விசேட அதிதிகளாக ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினுடைய மானுடவியல் துறை சார் நிபுணர் பேராசிரியர் பிரனீத் அபேய்சுந்தர அவர்களும், களனி பல்கலைக்கழகத்தினுடைய  மொழியியல் துறை சார் நிபுணர் பேராசிரியர் S.J. யோகராஜா மற்றும் ஸ்ரீ ஐயவர்டனபுர பல்கலைக்கழகத்தினுடைய குற்றவியல் துறையில் மூத்த விரிவுரையாளர் Mr. உதயகுமார அமரசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் ஒரு சிறப்பம்சமாக இந் நிகழ்விலே ஐக்கிய இராஜியத்தின் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமான ABE நிறுவனத்தினுடைய அங்கீகாரம் Amazon Campus க்கு   மேடையிலே விமர்சையாக வழங்கப்பட்டது.

கல்லூரியின் 35 விரிவுரையாளர்களும் 22 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறந்த விரிவுரையாளர்களுக்கான விருதினை உளவியலாளர் திருமதி. சப்ரா லரீப்  பெற்றுக்கொண்டார். சிறந்த இணை நிறுவனத்திற்கான விருதினை திரு. ஹேமந்த விஜேவர்தன அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் உட்பட 400 க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந் நிகழ்வை அலங்கரித்தனர். என அமேசன் கல்லூரியின் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: