இதேவேளை உன்னிச்சை குளத்திலிருந்து மேலதிக நீர் திறந்து விடப்பட்டதனால் கொழும்பு மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டு நகரில் இருந்து தன்னாமுனை வரையிலான பகுதிகளில் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மட்டக்களப்புக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் வீதிகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
மையங்கணை அம்பாறை ஊடாக திருகோமலையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த மக்கள் திரும்பிச் செல்ல முடியாமல் வீதிகளில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் இருந்து புகையிரது சேவைகள்மற்றும் தனியார் இலங்கை போக்குவரத்து போரூந்துகள் சேவைகள் உள்ளிட்ட அனத்து போக்குவரத்து சேவைகளும் தடைபட்டுள்ளன.
0 Comments:
Post a Comment