மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சுடர் ஏற்றுவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில்.
இந்நிலையில இவ்வருடம் பாதுகாப்பு படையினரினதோ புலனாய்வாளர்களினதோ எதுவித தடைகளும், தொந்தரவுகளும், இல்லை எனினும் நேற்றயத்தினம் செவ்வாய்கிழமை என்னிடம் வந்த பொலிசார் வத்தமானி அறிவித்தல் ஒன்றை எடுத்துவந்து மாவீரர் தினம் அனுஸ்ட்டிப்பது தொடர்பில் எடுத்துக் கூறினார்கள்.
வர்த்தமானி அறிவித்தலை நான் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை, வேண்டுமெனில் நீதிமன்ற உத்தரைவைக் கொண்டு வரவும் என நான் உரிய பொலிசாருக்கு எடுததுரைத்ததன் அடிப்படையில் அவர்கள் திரும்பிச் சொன்று விட்டார்கள். மீண்டும் என்னிடம் வரவில்லை.
எனவும், தற்போதைய காலநிலை காரணமாக மாவடிமுன்மாரிக்கு வரும் அனைத்து பிரதான வீதிளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதனால் நகர் புறங்களிலுள்ள மக்கள் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுப் பீடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தற்போது மாவட்டிமுன்மாரி துயிலுமில்லத்தில் நின்று கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment