மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாடசாலை சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.
“திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் ஆலோசகர் ஆசிரியர் இ.வரதராஜன் தலைமையில் இன்று வியாழக்கிழமை(01.10.2026) நடைபெற்ற சிறுவர்தின நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவவேணன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மேலும் புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ஜனார்த்தனன் சர்மா, மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்கள் அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மலர் மாலை அணிவித்து சிறுவர்கள் மற்றும் அதிதிகள் மேளதாளங்கள் முழங்க அழைத்துவரப்பட்டனர்.
சிறுவர்களின் ஆடல், பாடல், பேச்சு, கவிதை,
அபிநயம் ஆகியவை நிகழ்வை அலங்கரித்துடன். கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் அதிதிகளினால்
பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment