சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா 06 பரல்கள்.
மட்டக்களப்பு மாவட்டம், தாந்தாமலை பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி எல்லைப்பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமாக இடம்பெறும் கசிப்பு உற்பத்தி தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய சககிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், உள்ளிட்ட பலர், இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா 06 பரல்கள், வியாழக்கிழமை(07.11.2024) கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த பரல்களுக்கு சொந்தமான நபர்கள் யாரும் அவ்விடத்தில் இன்மையால் அதனை அழித்துள்ளார்கள்.
0 Comments:
Post a Comment