தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல் காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் தொழிலதிபருமான எஸ். சுரேஷ்குமார் தலைமையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் மற்றொரு தேர்தல் பிரச்சார காரியாலயம் நேற்றையதினம் (25)
திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரும் வேட்பாளருமாகிய பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் வேட்பாளர்களான சண்முகலிங்கம் சுரேஸ்குமார், இசடோர் ஜோசப் அன்ரனி கமலராஜா, கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி சுஜிகலா அருள்தாஸ் உட்பட கிராமிய மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment