பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சிறுவர் தினம் .
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் சர்வதேச சிறுவர் தினம் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .
பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு அலங்கரிப்பு மற்றும் சான்றோர் வேடங்களில் கலந்து கொண்ட சிறுவர்கள் ஊர்வலமாக வலயக் கல்விப் பணிமனைக்கு உத்தியோகத்தர்களினால் அழைத்து வரப்பட்டனர். பின்னர் சிறுவர்களினால் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி சிறுவர்கள் மகிழ்விக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், கணக்காளர் , உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment