9 Sept 2024

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் நினைவுத் தூபியில் பதட்டம்

SHARE

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் நினைவுத் தூபியில் பதட்டம்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சாத்திருகொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 34 வது நினைவஞ்சலி தினம் திங்கட்கிழமை(09.09.2024) அனுஷ்டிக்கப்பட்டன. 

அதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சந்திருக்கொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் படுகொலை செய்யப்பட்டனர், போன்ற விபரங்களை நினைணவுக் கல்லில் பொறித்து தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்றன. 

இந்தநிலையில் அங்கு வந்த பொலிஸார், தூபியை அவதானித்த பின்னர், நீங்கள் இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று எழுதியுள்ளீர்கள். இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த கொலையும் இடம்பெறவில்லை எனவும், ஏற்பாட்டு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இது தொடர்பில் பொதுமக்கள் விளக்கமளித்தவேளை, இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்பபோவதாக தெரிவித்த  பொலிஸால், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதுடன், தற்போது அங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும், அவ்விடத்தில் மேலதிக பொலிசாரும், வரவளைக்கப்பட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவ்விடத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும் அதில் உயிரிழந்தவர்களின் நினைவுக்கல் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், இராணுவ ஒட்டுக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொது மக்களை நினைவு கூருகின்றோம் எனும் வாசகம் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை பெலிசார் நினைவுத்தூபியிலிருந்து உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.



























SHARE

Author: verified_user

0 Comments: