15 Sept 2024

இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது - ஜனாதிபதித் வேட்பாளர் அரியநேந்திரன்.

SHARE
இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது - ஜனாதிபதித் வேட்பாளர் அரியநேந்திரன்.

இலங்கை மட்டும் எங்களை ஏமாற்றவில்லை இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது. இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது. அதை ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோம். என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில்  வைத்து  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….. 

தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் நான் எடுத்த இந்த முடிவில் இறுதிவரை பயணித்தே தீருவேன் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன. எதையும் மக்கள் நம்ப வேண்டாம். தமிழ் மக்களுக்கு நான் கூறுகின்றேன் நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை,  

இன்று இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.  ஏன் என்றால்  எல்லோருமே இதை அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள்  எல்லோருமே தவறு விட்டிருக்கின்றார்கள். 

இலங்கை மட்டும் எங்களை ஏமாற்றவில்லை இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது. இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கின்றது. அதை ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோம். 

அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனது தமிழ் தேசிய கொள்கையினையும் கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

 


SHARE

Author: verified_user

0 Comments: