21 Sept 2024

அமைதியான முறையில் மட்டக்களப்பில் வாக்குப்பதிவு

SHARE

அமைதியான முறையில் மட்டக்களப்பில் வாக்குப்பதிவு.

இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை (21.09.2024) திட்டமிட்டபடி இடம்பெற்றது. 

காலை 7 மணிமுதல் நாட்டின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக தமது வாக்குகளைப் மக்கள் பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது. 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் வாக்களிதிருந்தனர். 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 442 வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். 

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில 4 இலட்சத்தி 49 ஆயிரத்தி 606 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி. பெற்றுள்ளனர். 13,116 போர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்ததாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்களும், 1514 பொலிசாரும், தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.








SHARE

Author: verified_user

0 Comments: