22 Aug 2024

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு சுகாதார தகவல் மையம் திறந்து வைப்பு.

SHARE

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு சுகாதார தகவல் மையம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு சுகாதார தகவல் மையம் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.புவனேந்திரநாதன்  தலைமையில் திங்கட்கிழமை(19) திறந்து வைக்கப்பட்டடுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஆர்முரளிஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தகவல் மையத்தை திறந்து வைத்தார்.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் முகாமைத்துவ வைத்தியர்கள், மற்றும் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிமார், கணக்காளர், உள்ளிட்ட அலுவலக உதவியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இத்தகவல் மையம் நோயாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்லதொரு ஆதரவு மற்றும் ஆலோசனைகளையும் அவசர உதவிகளையும் மற்றும் சுகாதார சம்பந்தமான தகவல்களையும் முனைப்புடனும் வழங்குவதற்காகச் செயற்படவுள்ளதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.












SHARE

Author: verified_user

0 Comments: