நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் வியாழக்கிழமை (23.08.2024) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக பிரதி ஆணையாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் இடம்பெற்றது.
தபால் மூல வாக்களிப்பின் போது அத்தாட்சி படுத்தும் அதிகாரிகளுக்கான பொறுப்புகளும் அவர்களது கடமைகளும் சம்பந்தமாக வாக்களிப்பின் போது ஏற்படும் சட்டரீதியான சிக்கல்கள் போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமான விதிமுறைகள் பற்றியும் இங்கு கலந்து கொண்டவர்களுக்கு விரிவான விளக்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரனால் வழங்கி வைக்கப்பட்டது
இதன் போது முதன்முறையாக பணியாற்றவிருக்கும் அதிகாரிகளுக்கு விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கான அறிவுரைகளும் இங்கு வழங்கப்பட்டன.
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்காளரை அத்தாட்சி படுத்தல் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் வாக்களிப்பின் இறுதியில் வாக்கச்சீட்டுகளை பாதுகாப்பாக தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்தல் சம்பந்தமாகவும் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment