22 Aug 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில 4 இலட்சத்தி 49 ஆயிரத்தி 606 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில 4 இலட்சத்தி 49 ஆயிரத்தி 606  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை  11 தேர்தல் வன்முறை மீறல்கள் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல் பாதுகாப்புக்காக பொலிசார் பல பகுதிகளிலும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் வியாழக்கிழமை(22.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில 4 இலட்சத்தி 49 ஆயிரத்தி 606  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடா தொகுதியில் இருந்து 1 இலட்சத்தி 34 ஆயிரத்தி 104 பெயரும், மட்டக்களப்பு தொகுதியிலிருந்து  2 இலட்சத்தி 10 ஆயிரத்தி 293 பெயரும்,, பட்டிருப்பு தொகுதியில் இருந்து 1 லட்சத்தி 05 ஆயிரத்தி 209 பெயரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 மொத்த வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 

அதில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும், பட்டிருப்பு தொகுதியில் 122  வாக்களிப்பு நிலையங்களும்,  அமைக்கப்படவுள்ளன.  

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு  13 116 போர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். 

தபால் மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 4 திகதி மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகம், பொலிஸ் நிலையம்  5ஆம், 6ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்களிலும் இடம்பெறவுள்ளதோடு, தவறியவர்களுக்காக  11 ஆம்ஈ 12ஆம் ஆகிய திகதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற உள்ளனதேர்தலுக்கான முன்னேற்பாடு அலுவல பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மாவட்டத்தில் 11 தேர்தல்  மீறல்கள் பதிவாகியுள்ளன அதில் அதிகமானவை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் சம்பந்தமானவை. மாவட்டத்தில் தேர்தல் வன்முறை செயல்கள்  எதுவும் இதுவரை பதிவாகவில்லை. மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புக்காக பொலிசார் பல பகுதிகளிலும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதியான தேர்தலை முன்னெடுக்க தேவையான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என அவர் இதன்போது தெரிவித்தார். 

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக பிரதி ஆணையாளர் எஸ்.எம்.சுபியான் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.எஸ்.நவரூபரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.




 

SHARE

Author: verified_user

0 Comments: