ஜனாதிபதி சுற்றாடல் விருதினை வென்ற பிரதேச செயலாளரை வரவேற்கும் நிகழ்வு.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருதில் வெள்ளி பதக்கத்தினை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளது.
அதனை முன்னிட்டு பிரதேச செயலாளரை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை(01.07.2024) பிரதேச செயலக வளாகத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளரினால் விருதானது அலுவலக உத்தியோகத்தர்களிடம் கையளித்து உரை நிகழ்த்தப்பட்டதுடன், உத்தியோகத்தர்களினால் பாராட்டு உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
இப்போட்டிகளுக்காக 902 பேர் விண்ணப்பித்திருத்த நிலையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் வெற்றி பெற்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment