ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் ஜுன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் தின நிகழ்வு பிரதேச செலயகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிளாஸ்ரிக் பாவனையின் பாதக விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டதுடன், அது தொடர்பான சிறப்பு செய்திமடல் ஒன்றும் வெளியீடு வைப்பட்டது.மேலும் சிறந்த கிராம மட்ட பசுமைக் கழக செயற்பாடுகளுக்கான பாராட்டினை களுதாவளை மத்தி பசுமைக்குழு பெற்றுக்கொண்டதுடன், அந்த பிரிவின் கிராம உத்தியோகத்தர் எஸ்.ரதீசன் கௌரவிப்பினை பெற்றுக்கொண்டார்.
சிறந்த அலுவலக வீட்டுத் தோட்ட உருவாக்கத்திற்கான பாராட்டு மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பழமரக் கன்று விநியோகம், என்பனவும் இதன்போது இடம்பெற்றன.
அப்பிரதேச செலயகத்தில் கடமையாற்றும் 407 உத்தியோகஸ்த்தர்களின் முழுப்பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment