9 Jun 2024

வவுணதீவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 05 பரல் கோடாவுடன் 150 போத்தல் கசிப்பு மீட்பு

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோத கசிப்பு எனப்படும் வடிசாராயம் உற்பத்தி அதிகரித்துள்ளது. 

இந் நிலையில் இன்று ஞாயிறு அதிகாலை (09.06.2024) வவுணதீவு பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. வரதராஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட  நடவடிக்கையில், அப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டுப் பகுதியில் மிகவும் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரேத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. 

இதன் போது சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்நடவடிக்கையில்,  5  பரல் கோடா மற்றும் காடி போன்ற  பதார்த்தங்களுடன், 150 போத்தல் கசிப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும்

கைப்பற்றப்பட்ட பரல்கள் உள்ளிட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக திருவாக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.வரதராஜன் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: