10 Jun 2024

புதிய கிராம உத்தியோகஸ்தர்களுக்கு மூன்று மாத கால பயிற்சி ஆரம்பம்.

SHARE

பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் புதிதாக கிராம உத்தியோகஸ்தர் நியமனங்களாக நியமனம் பெற்றவர்களுக்கான மூன்று மாத பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு.

மக்களின் அத்தியாவசிய சேவைகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுப்பதற்கு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் புதிதாக கிராம உத்தியோகஸ்தர் நியமனங்களை பெற்றவர்களுக்கான மூன்று மாத பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை(10.06.2024) மட்டக்களப்பில் ஆரம்பமானது.

பொதுச் சேவை தேசத்தின் முன்னேற்றத்திற்கானது எனும் கருப்பொருளின் புதிதாக நியமனம் கிடைத்த 87 கிராம உத்தியோகஸ்தர்கான இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதசினி ஸ்ரீகாந்த் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் கலந்து கொண்டு கிராம சேவையாளர்களின் பணிகளின் முக்கியத்துவம் பற்றி இங்கு விளக்கமளித்தார். 

புதிதாக நியமனம் பெற்ற அவர்களின் அறிமுக நிகழ்வுடன் ஆரம்பமான இந்த பயிற்சி செயலமெர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான படுவான்கரைப் பகுதியில் இருந்து அதிக அளவிலான புதிய கிராம சேவையாளர்கள் கலந்து கொண்டமை இங்கு விசேட அம்சமாகும். 

இதன்போது மாவட்ட ஐக்கிய கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் வளவாளர்கள் புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இவர்கள் புதிதாக நியமனம் பெற்ற பிரதேச செயலகப் பிரிவில் இவர்களுக்கு உரிய கடமைகள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடைகள் அரசாங்கத்தின் திட்டங்களில் பயனாளிகளை தெரிவு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் காணிப் பிணக்குகள் போதைப் பொருள் தடுப்பு சுகாதார சேவைகள் கல்வி பயன்பாடுகள் என்ன பலதரப்பட்ட விடயங்களில் மூன்று மாத பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.  
















SHARE

Author: verified_user

0 Comments: