30 Jun 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 வீதமான வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிந்து கொள்வதில்லை -சத்தியபவான்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 வீதமான வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிந்து கொள்வதில்லை -சத்தியபவான்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 சதவீதமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிந்து கொள்வதில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி பி. சத்தியபவான் தெரிவித்தார். 

மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஞாயிறன்று (30.06.2024) மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். 

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் சமாதான செயற்பாட்டாளர்கள், மதப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அந்நிகழ்வில் தேர்தல் கால செயற்பாடுகள் சம்பந்தமாக தொடர்ந்து தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி சத்தியபவான், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 10 சதவீதமான வாக்காளர்கள் தங்களைப் பதிந்து கொள்ளாத நிலைமைகள் காணப்படுகின்றன. 

கவன ஈனம், தவறு அல்லது குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்று விடுகின்றது. 

எனவே, இந்த விடயத்தில் மக்களுக்காக மக்களோடு சேர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் மாவட்ட சர்வமத செயற்குழு போன்ற அமைப்புக்கள் இது விடயமாக மக்களுக்கு தெளிவான விளக்கங்களைக் வழங்குவதன் மூலம் இனிவரும் காலங்களில் விடுபட்டுப்போன குடியிருப்பாளர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.” என்றார். 

நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர். 

இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ரேவதன், விளையாட்டு உத்தியோகத்தரும் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான கே. சங்கீதா, கூட்டுறவுத் திணைக்கள  கணக்குப் பரிசோதகர் எம்..எம். உசனார், தொழுநோய் சம்பந்தமான கிழக்கு மாகாண சமூகப் பணி வளவாளரும் இணைப்பாளருமான அருட்பணி .எஸ். ரூபன் உட்பட இன்னும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 












SHARE

Author: verified_user

0 Comments: