மட்டக்களப்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு.
எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 15 வது ஆண்டை நாங்கள் கடந்து வருகின்றோம். தொடற்சியாக 15 வருடங்களாக இந்நிகழ்வை நாம் மேற்கொள்கின்ற இக்காலங்களிலே பல்வேறுபட்ட தடைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலே உருவாகின்றன.
என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நான்காவது நாளான புதன்கிழமை(15.05.2024) மாலை மட்டக்களப்பு கிரான் கிராமத்தில் மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து கஞ்சி காய்ச்சி மக்களுக்கு பரிமாறப்பட்டன.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த லவகுமார்….. 146000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள், அப்போது இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்காக வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக அந்த மக்கள் கஞ்சி வாங்குவதற்காக நின்றபோது கொத்துக் குண்டுகளாலும், எறிகணைகளாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
அவ்வாறு எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 15 வது ஆண்டை நாங்கள் கடந்து வருகின்றோம். தொடற்சியாக 15 வருடங்களாக இந்நிகழ்வை நாம் மேற்கொள்கின்ற இக்காலங்களிலே பல்வேறுபட்ட படைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலே உருவாகின்றன. அதுபோல் இவ்வருடமும், செவ்வாய்கிழமை பொலிசாரின் கெடுபிடிகள் இருந்தன. புதன்கிழமையும் பொலிசார் மிகவும் அச்சுறுத்துகின்ற விதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான கெடுபிடிகளையும் கடந்து எமது உணர்வுகளை எமது அடுத்த சந்த்தியினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன், எமது மக்களின் இனப்படுகொலை தினத்தை நினைந்து கஞ்சி கொடுத்து மக்களுக்குப் பரிமாறியிருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment