16 May 2024

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தால் இலவசமாக பசுக்கள் வழங்கி வைப்பு.

SHARE

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தால் இலவசமாக பசுக்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் பிரசித்தி வாய்ந்ததும், மிகவும் தொன்மையானதுமான, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கப்பெறும் பசுக்களை விற்பனை செய்யாமல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களுடன் இணைந்து மிகவும் பொருளாதார வசதி குறைந்த  குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்படி ஆலய நிருவாகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதற்கு அமைவாக அதன் இரண்டாம் கட்டமாக இலவசமாக பசுக்கழ் வழங்கி வைக்கும் நிகழ்வு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. 

இதன்போது ஆலய வண்ணக்குமார் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பசுக்களை வழங்கி வைத்தனர். 

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரி இரண்டு பிரிவிலிருந்து இணண்டு பயனாளிகளுக்கு தலா ஒவ்வொரு பசுக்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.










 

SHARE

Author: verified_user

0 Comments: