30 May 2024

கே.பி.எல். விளையாட்டுப் போட்டியும், புதிய விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

SHARE

கே.பி.எல். விளையாட்டுப் போட்டியும், புதிய விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுக்களிலும் தமது திறமைகளைத் தடம் பதித்து வரும் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் களுதாவளை பிறிமியன் லீக் (கே.பி.எல்) கிறிக்கட் சுற்றுப்போட்டி களுதாவளை பொது மைதானத்தில் ஞாயிற்றுக்கிமை(26.05.2024) மாலை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.சர்ஜின் தலைமையில் நடைபெற்றது.

களுதாவளையிலுள்ள சிரேஸ்ட்ட வீரர்களுக்கிடையில் ஒரு போட்டியாகவும், கனிஸ்ட்ட வீரர்களுக்கிடையில் மற்றுமொரு போட்டியாகவும், இவ்விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இறுதியில் களுதாவளையிலுள்ள சிரேஸ்ட்ட வீரர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் களுதாவளை ரைக்கஸ், அணியும் களுதாவளை சுப்பர் கெயின்ஸ் அணியும் விளையாடியதில் களுதாவளை ரைக்கர், வெற்றி பெற்றது. 

கனிஸ்ட்ட வீரர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் களுதாவளை கிங்ஸ் அணியும், களுதாவளை ஸ்பைக்ஸ் அணியும் விளையாடியதில் களுதாவளை கிங்ஸ் வெற்றிபெற்றிருந்தது. 

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மற்றும் கிராம பெரியோர்கள், பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் தற்போது அமைந்துள்ள விளையாட்டு அரங்கு பழுதடைந்த நிலையில் விளையாடி, தமது கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் தேசியமட்டம் வரைச் சென்று பல்வேறு சாதைகளைப் புரிந்து வருகின்ற இவ்வேளையில், தமது கிராமத்தில் காணப்படுகின்ற ஒரே ஒரு பொது விளையாட்டு மைதானமாகவுள்ள விளையாட்டு மைதானத்திற்கு புதிதாக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைத்து தருமாறு கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் களுவதாவளை கெனடி விளையாட்டுக் கமகத்தினர் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க இதன்போது இராஜாங்க அமைச்சரின் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிய விளையாட்டரங்கு அமைப்பதற்குரிய அடிக்கலும்  நடப்பட்டன.





















SHARE

Author: verified_user

0 Comments: