கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இடம் பெற்ற தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் பன்னாட்டு ஆய்வு மகாநாடு நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழ் சங்கம் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் பன்னாட்டு ஆய்வு மகாநாடு நிகழ்வு வெள்ளிக்கிழமை(17.05.2024) மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பாரம்பரிய தமிழர் கலாச்சார முறைப்படி இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் வா.கனகசிங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் சு.சதாசிவம் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் வீ.ரஞ்சிதமூர்த்தி கலந்து கொண்டனர்.
இவ்வாய்வு மகாநாட்டில் கலை கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றதுடன் தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் என்னும் தலைப்பில் பன்னாட்டு ஆய்வு மகாநாடும் இங்கு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து செம்புலன் ஆய்வு நூல் முதல் பிரதியை மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டதுடன். தமிழின் மேம்பாட்டுக்கு துணை நின்ற தமிழ்நாடு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆய்வாளர்கள் கலைஞர்கள் இங்கு அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர். 21 பேருக்கு சர்வதேச விருதுகள் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இந்தியாவிலிருந்து 40 கலைஞர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திய கலைஞர்களுக்கு இங்கு சுவாமி விபுலானந்தர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஒரே மேடையில் தமிழின் மேம்பாட்டுக்கு துணை நின்ற தமிழ்நாட்டு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட 60 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டு நூல் ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட சில நூல்களும் இங்கு அதிதிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment