விளையாட்டுத்துறை அமைச்சினால் தேசிய மட்ட மல்யுத்த வீரர்களை தெரிவு செய்வதற்கான மாகாண மட்ட போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வு.
விளையாட்டுத்துறை அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப் படுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பிரதேச மாவட்ட மட்டத்தில் இடம்பெற்று வந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் தேசிய மட்ட மல்யுத்த வீரர்களை தெரிவு செய்வதற்கான போட்டி சனிக்கிழமை (18.05.2024)காலை மட்டக்களப்பு வெபர் மைதான உள்ள அரங்கில் மாகாண சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வீ. ஈஸ்வரன் தலைமையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி வாசுதேவன் மற்றும் மாகாண மாவட்ட விளையாட்டு திணைக்கள உயர் அதிகாரிகள் போட்டியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
வயது மற்றும் உடல் நிறை அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் கட்டங்கட்டமாக இடம்பெற உள்ளத்துடன் இதில் தெரிவு செய்யப்படும் வீரர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 10 மேற்பட்ட ஆண் பெண் அணியினர் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment