தேர்தல் காலத்தில் மாத்திரம் வாயால் பேசிவிட்டுப் போவதினால் மாத்திரம் ஒன்றும் செய்துவிட முடியாது - இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்தரன்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் வாயால் பேசிவிட்டுப் போவதினால் மாத்திரம் ஒன்றும் செய்துவிட முடியாது. பேச்சுக்கப்பால் செயற்பாட்டு ரீதியான விடையங்களையும் முன்னகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும். எனவே அபிவிருத்தித்திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இல்லையேல் மக்களை வைத்து ஏமாற்றிப் பிழைப்பவர்கள் உள்ளார்கள்.
என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்தரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணைக் கிராமத்தில் 350 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 6 கிலோமீற்றர் வீதிகள் கார்பெட் வீதிகளாக புனரமைக்கப்பட்டு அதனை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்...
தேர்தல் காலத்தில் மாத்திரம் வாயால் பேசிவிட்டுப் போவதினால் மாத்திரம் ஒன்றும் செய்துவிட முடியாது. பேச்சுக்கப்பால் செயற்பாட்டு ரீதியான விடையங்களையும் முன்னகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும். எனவே அபிவிருத்தித் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் இல்லையேல் மக்களை வைத்து ஏமாற்றிப் பிழைப்பவர்கள் உள்ளார்கள்.
மக்களுக்கான தேவைகளைக் கண்டறிந்து சேவைகளை மேற்கொள்பவர்கள்தான் மக்கள் தலைவர்களாகும். எனவே வாக்குக்காக வேலைகளைச் செய்ய வேண்டும். எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment