9 Apr 2024

சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனையும்.

SHARE

சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனையும்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது திங்கட்கிழமை(08.04.2024) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக்கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

 இதன் போது  25 சமுர்த்தி பயனாளிகளுக்கு அருணலு கடன், நுகர்வு கடன் மற்றும் வாழ்வாதார கடன்  என்பன வழங்கப்பட்டதுடன், 45 மாணர்களுக்கு சிசு திரிய புலமைப்பரிசில்களும்  வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பால் 20 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன், தலைமையக முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.விமலா யோகேந்திரன், மாங்காடு, எருவில், கல்லாறு சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், விற்பனையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: