பட்டிருப்பில் மீண்டும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி) கல்வி சமூகத்தினால் பட்டிருப்பு கல்வி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று செவ்வாய்கிழமை (09.04.2024) இடம்பெற்றது.
பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி முன்றலில் இருந்து ஆர்பாட்டக்காரர்கள் பேரணியாக பட்டிருப்பு வலயகல்வி அலுவலகம் வரை சென்றனர். பின்னர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் நிற்றுகொண்டு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அல்லது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் பிரகாரம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளர், பூ பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தமது பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியைக் கருத்திற் கொண்டு பாட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை உடன் இடமாற்றம் செய்து தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது வருகைதந்த இராஜாங்க அமைச்சரின் செயலாளர் பூ.பிரசாந்தனிடம் மகஜரை கையளித்தனர். அதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment