அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டம் தொர்பில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான அறநெறி புதிய பாடத்திட்டம் மற்றும் அறநெறிக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சனிக்கிழமை(06.04.2024) செட்டிபாளையம் மகா வித்தியாலய மண்டபத்தில் நடை பெற்றது.
இதில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, ஆரையம்பதி மற்றும் மண்முனை வடக்கு பிரிவின் ஒருபகுதி, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவ்வாறா மற்றுமொரு நிகழ்வு, கோறளைப்பற்று வடக்கு வாகரை, கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று தெற்கு கிரான், ஏறாவூர்பற்று செங்கலடி, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனை வடக்குப் பிரிவின் மற்றுமொரு பகுதியைச் சேர்ந்த அறநெறிப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு செங்கலடி மத்திய கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(07.04.2024) நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வுளில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி லண்டன் கிழக்கு மாகானத்தின் இணைப்பாளர் க.துரைராஜா, ,மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகஸ்தர் கி.குணநாயகம், பாடசாலைகளின் அதிபர்கள், அம்பாறை மாவட்ட செயலக மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜ் மற்றும் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் அத்துடன் இந்து அமைப்புகள் மற்றும் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலைகளுக்கா வேண்டி அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத்திட்டம் தொர்பில் அறநெறிப்பாடசாலகளின் ஆசிரியர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment