காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு.
காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் வியாழக்கிழமை(25.04.2024) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வைத்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, வெல்லாவெளி பட்டிப்பளை, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடத்தில் இதன்போது கொழும்பிலிருந்து வருகைதந்த காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் நேரில் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
61 பேருக்கு இதன்போது அழைப்பு விடக்கப்பட்டிருந்தன. இதன்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
0 Comments:
Post a Comment