கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து மட்டக்கப்பு நகரில் துண்டுப்பிரசுரம் வினியோகம்.
ஜனநாயகம் மற்றும் அதன் சார்ந்த சவால்களும், அடிப்படை மனித உரிமைகள், வாக்குரிமை மற்றும் தேர்தலை ஒத்திவைத்தல், போன்ற விடையங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் மட்டக்களப்பு நகரில் மக்கள் மத்தியில் வினியோக்கிக்கப்பட்டன.தேர்தங்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இணைப்பாளர் வி.ரமேஸ்ஆனந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள், சிவில் சமூக செயற்பட்டார்கள், ஊடகவியலாளர்கள், என பலரும் இணைந்திருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள போரூந்து தரிப்பிடம், மற்றும் அதனை அண்டியுள்ள சூழல், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இத்துண்டுப்பிரசுரங்கள் அவர்களால் வினியோகிக்கப்பட்டன.
ஜனநாயகம் மற்றும் அதன் சார்ந்த சவால்கள், அடிப்படை மனித உரிமைகள் சார்ந்த விடையங்கள், வாக்குரிமை, தேர்தலை ஒத்திவைத்தல் போன் விடைங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment