19 Apr 2024

வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவா வலுக்கிறது ஆர்ப்பாட்டம்.

SHARE

வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவா வலுக்கிறது ஆர்ப்பாட்டம்.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சிவானந்தம் சிறிதரன் அவர்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சிவானந்தம் சிறிதரன் அவர்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை(19.04.2024) களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்திற்கு முன்னார் அப்பகுதி பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுபட்டனர்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடான இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம், அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து, குறுகிய காலத்தில் வலயத்தை முன்னேற்றிய கல்விப் பணிப்பாளர் எமக்கு வேண்டும், போன்ற பல வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிவினந்தம் சிறிதரன் அவர்களை இடமாற்றம் செய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் சி.சிறிதரன் அவர்களை பட்டிருப்பு வலயத்திற்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்து, கிழக்குமாகாண ஆளுனர்கல்வி அமைச்சின் செயலாளர்பிரதம செயலாளர்மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து வியாழக்கிழமையும் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.


 













SHARE

Author: verified_user

0 Comments: