7 Mar 2024

உற்பத்தி பொருட் கண்காட்சியும் விழிப்புணர்வும்.

SHARE

உற்பத்தி பொருட் கண்காட்சியும் விழிப்புணர்வும்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடைய பெண்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் முகமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் வீட்டையும் சமூகத்தையும் அழகாக வைத்திருக்கும் பெண்களை வாழ்த்துவோம் எனும் கருப்பொருளுக்கு அமைவாக பெண்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும்  விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விற்பனை கண்காட்சியை பார்வையிட்டதுடன் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர் தற்போதைய காலகட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

மாவட்டத்தின் பெண்கள் அமைப்பினர் முன்னெடுக்கும் வாழ்வாதார உதவி திட்டங்கள் சம்பந்தமாக எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ள திட்டங்கள் பற்றியும் இதன்போது அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சமூகத்தில் வாழ்வை விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பெண்களை உயர்த்துவோம் எனும் செயல்திட்டத்தின் அமைவாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மேலும் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு  பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இந்த விசேட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனதனர்.

இதன்போது பெண்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள்ளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தன்போது அரச வங்கிகளில் இவ்வாறு சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு கடனுதவி வளங்கள் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.














SHARE

Author: verified_user

0 Comments: