தேர்தல் சட்டம், தேர்தல் முறைகள் தொடர்பான விளக்கமளிக்கும் பயிற்சி செயலமர்வு.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வி.ரமேஸ் ஆனந்தன் தலைமையில், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் பங்கு பற்றுதலுடன் இச்செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என்.விக்டர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விளக்கங்களையும், தெழிவூட்டல்களையும் வழங்கி வைத்தனர்.
இச்செயலமர்வில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் கொள்வனவு உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஊடாக சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இச்செயலமர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment