30 Mar 2024

விவேகானந்தா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.

SHARE

விவேகானந்தா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி

வைப்பு.கிழக்கு மாகாண ஆளுனரின் முயற்சியினால் இந்திய நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க முப்பெரும் விழா விழாவினை சிறப்பிக்குமுகமாக விவேகானந்தா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு.

கிழக்கு மாகாணத்தில்   பின்தங்கிய பிரதேச வறிய மாணவர்களின் நலன் கருதி  50 மில்லியன் ரூபா செலவில்  புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மட்டக்களப்பு விவேகானந்தா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு சனிக்கிழமை(30.03.2024) நண்பகள் மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதியில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து கொண்டு அங்குஇடம் பெற்ற பூஜை வழிபாடுகளின் பின் இந்த புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தாரமேலும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் ராமகிருஷ்ண மிஷன் பிரதிநிதிகள் இந்தியா வேலூர் மாவட்ட உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி  மகராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள திணைக்கள உயர் அதிகாரிகள் மாணவர்கள் பொதுமக்கள்  என பலரும் கலந்து  சிறப்பித்தனர்

 

 




















SHARE

Author: verified_user

0 Comments: