மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்த பாரிய மரம் துரிதகதியில் செயற்பட்டு போக்குவரத்தைச் சீர் செய்த அதிகாரிகள்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீதியோரத்தில் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென வீதிக்கு குறுக்காக முறிந்து சரிந்து விழுந்துள்ளது. இதனால் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்தும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது.
இவ்விடையம் அறிந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களும், வீதிக்குக் குறுக்காக வீழ்ந்து கிடந்த பாரிய மரத்தை வெட்டி அகற்றி பிரதான வீதியின் போக்குவரத்தை சீர் செய்து கொடுத்துள்ளனர்.
குறித்த மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் வழக்கம்போல் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment