12 Mar 2024

சிறீ விக்ரம கீர்த்தி விருது வழங்கும் விழா

SHARE

 சிறீ விக்ரம கீர்த்தி விருது வழங்கும் விழா

மலையகம் 200  ஐ நினைவுகூரும் முகமாக  கண்டி  வீரகெப்பற்றிபொல  கேட்போர்கூடத்தில்  கடந்த  10.03.2024  அன்று மலையகம்  மாத்திரமல்லாது  இலங்கையின்   பல்வேறு  மாவட்டங்களில் இருந்து  வருகை  தந்த  கல்வி, கலை, கலாசாரம், சமூக சேவை, நாடகம், ஆன்மீகம், ஊடகம், இலக்கியம், போன்ற  துறைகளில் முழு அளவில் தனது திறமையை வெளிப்படுத்திய  கலைஞர்களுக்கு  சிறீ விக்ரம கீர்த்தி விருது வழங்கி கௌரவிப்பு வழங்கும் இடம்பெற்றது. 

சுமார் 140க்கும் அதிகமான கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை-இந்திய நட்புறவு அமைப்பினரால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசபந்து, தேசாபிமானி தேசகீர்த்தி ஜனரஞ்சன சிறீ தீபன் தலைமையில் விழா இடம்பெற்றது. 

மங்கள விளக்கேற்றல், மாத்தளை  பாக்கியா மகளிர் மகா வித்தியாலய மாணவியின் தமிழ் தாய் வாழ்த்து, அதிதிகளின் பிரசன்னத்துடன் வரவேற்பு  அளிக்கப்பட்டு   நிகழ்வு ஆரம்பமானது. 

நிகழ்வின் பிரதம  அதிதியாக  முன்னாள்  மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்தோடு மும்மத தலைவர்களும் கலந்து கொண்டனர். 

மேலும் அதிதிகளாக  தினகரன்  தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர்  வி.செந்தில்வேலவர் சிரேஸ்ட ஊடகவியலாளர், மொழி பெயர்ப்பாளர் கே.ஈஸ்வரலிங்கம சமாதான நீதவான், முன்னாள் மத்திய மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஏ.எட்மண்ட் மகிந்திர, பேராதெனிய பல்கலைக்கழக  கலைப்பிரிவு  முன்னாள் முதல்வர் துரை மனோகரன், கண்டி நகர தொழிலதிபர்கள் என பலர் கலந்து சிறப்பித்ததோடு மும்மத ஆசிகளும் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்விற்கு தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனையை வழங்கியது.

இதன்போது கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், இலக்கியவாதிகள், பாடகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், ஆன்மீகவாதிகள், தொழிலதிபர்கள் பாராட்டி பதக்கம் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு, இலங்கை இந்திய நட்புறவை நினைவுகூரும் கழுத்து சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 

மலையகம், வடமாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம் , சப்ரகமுவ  மற்றும் மத்திய மாகாணம் உட்பட  நாட்டின் ஏனைய மாகாண  கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை விசேட  அம்சமாகும். 

இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, இந்நிகழ்வில் ஊவா  கலைஞர்களும் ஊவா  தமிழ் இலக்கிய பேரவையின்  உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு ஊவா தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் ஏழு பேர் விருதினை தனதாக்கியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 








SHARE

Author: verified_user

0 Comments: