மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய மனித உரிமைகள் முதலுதவி மையம் வியாழக்கிழமை மாலை(21.03.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சந்திவெளியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இந்த மனித உரிமைகள் முதலுதவி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது Right to life நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிலிப் திஷா நாயக்க அவர்கள் திறந்து திறந்து வைத்தார்.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் பணிப்பாளர் வ.றமேஸ் ஆனந்தன், Right to life அமைப்பின் இணைப்பாளர் பிரசாந்தன், திட்ட முகாமையாளர் மதுசாலினி, சர்வமதத்தலைவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment