மலையகத்தில் மகிழ்ச்சி தரும் சமாதான பெருவிழா.
வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சினைகள், அடிமைத்தனங்கள், போன்றவற்றில் இருந்து விடுதலை பெற விரும்பும் அனைவருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 23, 24, 25 ஆகிய திகதிகளில் ஹட்டன் ன D.K.W. கலாசார மண்டபத்தில் மாலை தினமும் 4:00 மணிக்கு இப்பெருவிழா நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மிஷ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின்
ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மிஷ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் தலைமை போதகர், தேவ செய்தியாளர் சுவிசேஷகர் ஜெயம் சாரங்கபாணி அவர்களால் இது நிகழ்த்தப்படவுள்ளது.
வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் குடும்பத்துடன் வந்து தேவனுடைய இலவச விடுதலையை பெற்றுக்கொள்ளலாம்.
அன்றைய தினம் அபிஷேக நிறைந்த ஆராதனை, தேவ செய்தி, விடுதலை நேர ஜெபம் குறிப்பாக இலங்கை தேசத்தின் சமாதானம், தேசத்தின் தலைவர்கள், தேசத்தின் மக்கள், தேசத்தின் சுபீட்சத்திற்கு தேவ பிள்ளைகள் ஒன்றினைந்து ஜெபிக்கும் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மிஷ்பா ஜெப மிஷனரிஆலயத்தின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment