கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரியாக லெப்டினன் கேர்ணல் சனத் அபேதிலக நியமனம்.
கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரியாக லெப்டினன்
கேர்ணல் சனத் அபேதிலக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு அலுவலகத்தில்
திங்கட்கிழமை (19.02.2024) கடமையை பொறுப்பேற்றார்.
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு
வழங்கி சமூகத்துடன் இணைப்பாக்கம் செய்வதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக மட்டத்தில்
போதைப்பொருள் முற்தடுப்பு விழிப்புணர்வு செயற்பாடுகளை இப்புனர்வாழ்வு நிலையமானது
முன்னெடுத்து வருகின்றது.
முன்னாள் பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் சன்டிக்க
எகலப்போல மாவட்ட செயலகத்துடன் இணைந்து போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்ச்சி திட்டங்களை
முன்னேடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment