27 Feb 2024

கிழக்கு மாகாணத்தில் சுமார் 40,000 வீட்டுத் தேவைகள் இருக்கின்றன.

SHARE

கிழக்கு மாகாணத்தில் சுமார் 40,000 வீட்டுத் தேவைகள் இருக்கின்றது.

கிராமமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நிரந்தர வீடுகள் நிர்மாணிக்க முன்வந்தமைக்காக சிலி நாட்டு தொண்டு நிறுவனமான செலவிப் பவுன்டேன் (SELAVIP Foundation) நிறுவனத்தினைப் பாரட்டுவதுடன், இது தற்போதைய நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் எமது அரசாங்கத்திற்கு அந்நாட்டு மக்களால் வழங்குகின்ற அளப்பெரிய  சேவையாகும்என கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளருமான .எஸ்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

திருகோணமலை மக்கள் சேவை மன்றம் 25 நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பயனாளிகளுக்கு முதல் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வ சனிக்கிழமை(24.02.2024) திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது பொருளாதார சுமைகளில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் இந்நிலையில் நாட்டினுடைய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகவுள்ளது.

இந்த அடிப்படையில் கிழங்கிலங்கையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு  மாவட்டங்களில் உள்ள 25 வறிய மற்றும் நீண்டகாலம் ஓலைக் குடிசைகளில் தமது வாழ்வாதாரத்தினை பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை திருகோணமலை மக்கள் சேவை மன்றம் அமுலாக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

இந்த நிறுவனம் மிக நீண்ட காலம் தேசிய மற்றும் சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை தேவையுடை மக்களுக்காக ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன்.

இந்த  சமூகசார் அக்கறையின் நிமிர்த்தம் இருபத்தைந்து நிரந்தர வீடுகள் நிர்மாணிப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது எமது மாகாணத்தின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு செயற்பாடாவே நான் கருதுகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 40,000 வீட்டுத் தேவைகள் இருக்கின்றது. இந்த நிலமைகளில் குறித்த மக்களின் தேவைகளைப் நிறைவு செய்வதற்கு சிலி நாட்டுத் தொண்டு நிறுவனமான செலவிப் பவுன்டேன் (SELA VIP Foundation) நிறுவனம் முன்வந்துள்ளதையிட்டு நான் பாரட்டுவதுடன், இது தற்போதைய நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் எமது  அரசாங்கத்திற்கு அந்நாட்டு மக்களினால் வழங்குகின்ற அளப்பெரிய சேவையாகும்.

இந்த வீட்டுத் திட்டத்தினைப் பெற்றுள்ள நீங்கள் பெரும் அதிர்ஸ்டசாலிகள். இந்த பொருளாதார நிலமைகளின் போது உங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள உதவியானது மிகவும் பயனுள்ளது. இதன் மூலம் நீங்கன் மிக நீண்டகாலம் எதிர்நோக்கிய வீட்டுப் பிரச்சினைகள் நீக்கப்படுகின்றது. இதன் மூலம் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிம்மதியாகவும் சந்தோசத்துடனும் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயனாளிகளாகிய நீங்கள் இந்த நிறுவனங்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் என்.ரவீச்சந்திரன், திருகோணமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறைவேற்று அதிகார தர்மபவன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.தங்கரூபன், மக்கள் சேவை மன்றத்தின் மூத்த ஆலோசகர் பிரகலநாதன், நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரி திருமதி பீ.கிரிஷ்ணவேனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: