பாலமுனை கருணாகரன் விளையாட்டு மைதானத்தை உடன் புனரமைப்புச் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலேசனை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதிவுப்பற்றுப் பிரதேசத்தின் பாலமுனை கருணாகரன் விளையாட்டு மைதானத்தை உடன் புனரமைப்புச் செய்யுமாறு வர்த்தக இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாலமுனை கருணாகரன் விளையாட்டுக் கழகத்தினார் இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அப்பகுதிக்கு விஜயம் செய்து விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலமையை பார்விட்டார்.
இதன்போது விளையாட்டு மைதானம் கடந்த வெள்ளப் பெருக்கினால் பழுதடைந்துள்ளதோடு, சகதிகள் நிறைந்தாகவும் காணப்படுகின்றது. எனவே குறித்த விளையாட்டு மைதானத்திற்கு மண் இட்டு உடன் செப்பனிடுவதற்குரிய வேலைகளை மேற்கொள்ளுமாறு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில் தமது கோரிக்கையை ஏற்று விளையாட்டு iமாத்திதிற்கே நேரடி விஜயம் செய்து நிலமைகளை அவதானித்த பின்னர் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுத்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்தின் அவர்களுக்கு பாலமுனை கருணாகரன் விளையாட்டுக் கழகத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளர்.
0 Comments:
Post a Comment