27 Jan 2024

மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலய கொடியேற்றத்திருவிழா.

SHARE

மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலய கொடியேற்றத்திருவிழா.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் 400 வருட தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலய 400 வது ஆண்டு பெருவிழாவின் வருடாந்த கொடியேற்றத்திருவிழா வெள்ளிக்கிழமை(26.01.2024) நடைபெற்றது.

திருவிழா தொடர்ந்து நவநாட்கள் திருவிழா இடம்பெற்று இறுதித் கொடிஇறக்கத் திருவிழா 04.02.2024 அன்று காலை இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயம் தனது 400 வது ஆண்டு பெருவிழாவை இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுகின்றது.

ஆலய பங்குத்தந்தை ஜூலியன் பிரான்சிஸ் தலைமையில் கொடியேற்ற திருவிழா இடம் பெற்றது. ஆலயத்தின் 9 வட்டார கொடிகள் ஆலயத்திலிருந்து விசேட பூஜைகளின் பின்பு கொடியேற்ற இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆலய பங்குத் தந்தையினால் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆலயத்தின் வட்டார தலைவர்களினால் இவ்வாண்டுக்கான திருவிழா கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. 400 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலயம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஆலய மணியோசை முழங்க கொடியேற்ற திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு 02.02.2024 அன்று காலை ஆலயத்தின் 9 வட்டாரத்திலுள்ள 400 சிறுவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்வு  இடம்பெறவுள்ளது. 03.02.2024 அன்று மாலை இவ்வருட திருவிழாவின் வட்டார சுற்று பிரகார ஊர்வலம் ஆலய பங்கு காரர்களால் முன்னெடுக்கப்படள்ளன.









 

SHARE

Author: verified_user

0 Comments: